×

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் வர்த்தக ஒப்பந்தம்... சீனாவிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்

வாஷிங்டன்  : 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன் அமெரிக்காவுடன் சீனா  வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால் விளைவுகள் மோசமாகும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போருக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இருதரப்பு பிரதிநிதிகள் உயர்மட்ட அதிகாரிகள், நீதி அமைச்சர்கள் இடையே நடைபெற்ற பலக்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் அமெரிக்க உடனான வர்த்தகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 500 பில்லியன் டாலர் அளவு சீனா ஆதாயம் பெறுவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் பேச்சு வார்த்தையை அதிபர் தேர்தல் வரை இழுத்தடிக்கலாம் என்ற சீனாவின் திட்டம் நிறைவேறாது என்று டிரம்ப் குறிப்பிட்டார். மீண்டும் தானே அதிபர் ஆனால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று சீனாவுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : US Presidential Election ,Trump ,US ,China , Trump says US , China, trade talk,
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்