×

போடியில் குவாரி பள்ளத்தில் மூழ்கி சிறுவன் பலி

போடி: போடி பரமசிவன் மலை கோயில் பின்புறம் கல்குவாரியிலுள்ள 250 அடி பள்ளத்தில் கை கழுவ சென்ற சிறு வன் வலுக்கி விழுந்து பலியானதால் கரட்டுப்பட்டி கிராமம் சோகமாக மாறியது. போடி அருகே போ.மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியிலுள்ள கரட்டுப்பட்டியை சேர்ந்த ஜங்கால். இவர் ஆடு, மாடு வளர்க்கிறார். இவரது மகன் ஸ்ரீகாந்த்(7). இவனும் வழக்கமாக ஆடு, மாடுகளை நண்பர்களுடன் சேர்ந்து மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்று ஸ்ரீகாந்த் உள்பட சிலரும் போடி பரமசிவன் மலைக்கோயில் பின்புறமுள்ள கல்குவாரி பகுதியில் ஆடு, மாடு மேய்த்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த மாட்டுச்சாணத்தை மொத்தமாக ஒரு இடத்தில் குவித்தனர். இதனால் கைகழுவதற்காக ஸ்ரீகாந்த், அருகில் உள்ள பிரகாஷ் என்பவரது கல்குவாரிக்கு சென்றான். அங்கு 250 அடி ஆழத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. அதில் கை கழுவ இறங்கியபோது தவறி ஸ்ரீகாந்த் உள்ளே விழுந்து பலியானான். இதுகுறித்து உடனிருந்த நண்பர்கள் தந்த தகவலையடுத்து போடி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஸ்ரீகாந்த் உடலை மீட்டனர். போடி புறநகர் இன்ஸ்பெக்டர் தர்மர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுவனின் பிரேதத்தை போடி அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

Tags : quarry , Podi, quarry, boy, kills
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...