பிரிட்டன் பணக்காரர் பட்டியல் 2019 : முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியர்கள்

லண்டன் : பிரிட்டனில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை இந்தியர்கள் பிடித்துள்ளனர். பிரிட்டனில் முதல் ஆயிரம் பெரும் [பணக்காரர்கள் கொண்ட பட்டியலை சண்டே டைம்ஸ் இதழ் வெளியிட்டது. அதில் முதல் இரண்டு இடங்களை இந்தியர்கள் பிடித்துளள்னர். இந்துஜா சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ இந்துஜா, கோபிசன் இந்துஜா ஆகியோர் முதல் இடத்தில் உள்ளார். அவர்களின் சொத்து மதிப்பு 1 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்துஜா குழுமம் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

மேலும் மும்பையில் பிறந்த ரூபன் சகோதரர்கள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். இவர்களது சொத்து மதிப்பு ரூ.96 ஆயிரம் கோடி ஆகும். மற்றொரு இந்தியரான லட்சுமி மிட்டல் கடந்த ஆண்டு நஷ்டத்தை சந்தித்ததால் 5-வது இடத்தில் இருந்து பதினோராவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சொத்துக்கள் பங்கு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனங்களின் சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.


Tags : The Indians ,places , Rich List 2019, Hinduja brothers ,top rankings
× RELATED கர்நாடக மாநிலத்தில் 30 இடங்களில்...