×

அமித்ஷா திட்டவட்டம் திரும்பவும் நாங்களே வந்தா 370ஐ காலி பண்ணிடுவோம்

இமாச்சலப் பிரதேசம், சிம்லா அருகே சம்பா மாவட்டம் சோகன் மைதானத்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது: காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, அவரது மாநிலத்திற்கென தனி பிரதமர் வேண்டும் என்கிறார். காங்கிரசோ, தேசத் துரோக சட்ட திருத்தம் மற்றும் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் ஆகியவை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறி உள்ளது. இதுவே, அவர்களின் மனநிலையை தெளிவாக காட்டுகிறது.

பாஜ.வை பொறுத்த வரையில், மீண்டும் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நிச்சயம் நீக்குவோம். வான்வழி தாக்குதலுக்கு பதிலாக தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ராேடா கூறுகிறார். தேர்தலில் எதிர்க்கட்சிகள் தங்கள் பிரசாரத்தில் ஊழலை பற்றி பேசாதது இதுவே முதல் முறை அந்தளவுக்கு மோடி ஆட்சி அமைந்துள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Tags : Amidisha , Amit Shah's, proposal, evolve 370
× RELATED தேர்தல் ஆணையத்துக்கு மோடி, அமித்ஷா...