×

தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டபோது பிரதமர் மோடி ஏன் பதவி விலகவில்லை? மாயாவதி கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அதிகமான தாக்குதல் நடந்துள்ளது. அதற்கு பொறுப்பேற்று மோடி ஏன் பதவி விலகவில்லை என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அப்போது ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் தலித் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ராஜஸ்தான் அரசிற்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறாமல் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டு, முதலை கண்ணீர் வடிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை மாயாவதி சந்தித்தார். அபோது கூறியதாவது, அல்வார் கூட்டு பலாத்கார விவகாரத்தை வைத்து பிரதமர் மோடி கேவலமான அரசியலை செய்து வருகிறார். பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதற்கும் உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் கட்சி உறுதியாக எடுக்கும். ராஜஸ்தான் மாநில அரசு இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசியல் ரீதியான எங்கள் முடிவுகளை அறிவிப்போம்.

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளது. அதற்கெல்லாம் ஏன் அவர் பொறுப்பேற்கவில்லை? ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா மரணம், குஜராத் மாநிலம் உனாவில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ஏன் பதவி விலகவில்லை? இவ்வாறு மாயாவதி கூறினார்.

Tags : Modi ,Mayawati , When the Scheduled Castes were attacked, Prime Minister Narendra Modi did not resign, Mayawati questioned
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...