×

‘தமிழகத்தில ஒத்த சீட்டு கிடைக்காதுப்பூ...’ பாஜ.வுக்கு மம்தா சவால்

‘தமிழகம், ஆந்திரா, கேரளம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஓரிடத்தில் கூட பாஜ வெற்றி பெறாது’ என மம்தா பானர்ஜி பேசினார். மேற்குவங்க மாநிலம், 24 பர்கானா மாவட்டம், ஹரோவா நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் பாஜ அதிக இடங்களில் வெற்றி பெறாது. உத்தரப் பிரதேசத்தில் 73 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாஜ வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை 13 அல்லது 17 தொகுதிகளாக குறையும்.

ஆந்திரா, கேரளம், மேற்கு வங்கம், தமிழகம், ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஓரிடத்தில் கூட பாஜ வெற்றி பெறாது. மத்தியப் பிரதேசத்திலும் அக்கட்சி தோல்வி அடையும். பாஜவுக்கு வாக்களிக்காதீர்கள்.
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். மத்தியில் புதிய அரசை அமைப்பதில் திரிணமுல் காங்கிரஸ் முக்கியப் பங்கு வகிக்கும். பாஜ, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ ஆகிய கட்சிகள் ஒன்றே. பாஜவை எதிர்க்க துணிவுள்ள கட்சி திரிணமுல் காங்கிரஸ் மட்டுமே. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பயணிக்கும் வாகனங்களையும் தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்றார்.

Tags : Mamta ,BJP ,Tamilnadu , 'A lot of tickets in Tamilnadu are available, Mamta challenging for the BJP
× RELATED மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி,...