×

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும்: கள் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்கு சமம் என்று கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறஉள்ளது. பணத்தை முன்னிறுத்தி வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் தேர்தலாக இதுமாற்றம் கண்டுள்ளது. சட்டப்படி வாக்குக்குப்பணம் கொடுப்பதும், வாங்கிக் கொண்டு வாக்காளர்கள் வாக்களிப்பதும் குற்றம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதைப் பரவலாக பார்க்க முடிகிறது.  

வாக்குக்குப் பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் குற்றமாக வாக்காளர்களும், வேட்பாளர்களும் கருதுவதாக தெரியவில்லை. இது போக போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை முன்னிறுத்துவதும் வழக்கமாகிப் போனது. மொத்தத்தில் வாக்காளர்களுடைய அறியாமையை அறுவடை செய்வதே தேர்தல் என்பது நடைமுறையாகிப் போனது. இவ்வாறான போக்கு ஜனநாயகத்திற்கு அடிக்கும் சாவுமணியே ஆகும். பண்பாட்டை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும். இவ்வாறு நல்லசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : voters , Voter, money, democracy, burial, movement, accusation
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...