×

வாலிபரை கடத்தி தாக்குதல் தலைமை காவலர் மகன் கைது

சென்னை: செங்கல்பட்டை சேர்ந்தவர் கணேசன் (50). அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருகிறார். இவரது மகள் வாசவி (20), டென்னிஸ் வீராங்கனை. இந்தியன் பேட்மிட்டன் அசோசியேஷன் உறுப்பினராகவும் உள்ளார்.இவரும், கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவை சேர்ந்த தொழிலதிபர் பாசின் முகமதுவின் மகன் நபீத் அகமது (21) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி வாசவி, அமெரிக்காவில் இருந்து  சென்னை வந்தார். கடந்த 9ம் தேதி மாலை நபீத்தும், வாசவியும் அண்ணா நகரில் உள்ள ஒரு பூங்காவில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, நபீத் அகமது, வாசவியின் அனுமதியின்றி செல்போனில் செல்பி எடுத்தார்.

அந்த படத்தை அழித்துவிடும்படி வாசவி கூறியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நபீத் வாசவியை தாக்கிவிட்டு தப்பினார். இதையடுத்து வாசவி சென்னையில் உள்ள சக நண்பர்களான பாஸ்கரன் சரவணன், லெனின் ஆகியோரை தொடர்புகொண்டு இதுபற்றி தெரிவித்துள்ளார். அவர்கள், கடந்த  வெள்ளிக்கிழமை நபீத்திடம் நைசாக பேசி ஜாபர்கான்பேட்டை அழைத்து சென்று, அங்குள்ள முட்புதருக்குள் வைத்து, சரமாரியாக தாக்கி, அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், டி.பி.சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, சரவணன், லெனின் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பாஸ்கரனை நேற்று கைது செய்தனர். இவர், வடபழனி அனைத்து மகளிர்  காவல் நிலைய தலைமை காவலர் வேளச்சேரியை சேர்ந்த சாஸ்திரகனி என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : attacker , Kidnapped ,kidnapping, Chief Captain, son, arrested
× RELATED பந்தலூர் அருகே யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி