ஆகாஷ் மருத்துவமனையில் அன்னையர் தினவிழா

கீழ்ப்பாக்கம்: வடபழனி 100அடி சாலையில் உள்ள ஆகாஷ் மருத்துவமனையில் உலக அன்னையர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், மருத்துவமனையின் இயக்குனர்கள் டாக்டர் காமராஜ் மற்றும் ஜெயராணி காமராஜ்  பேசியதாவது: பெண்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்மை தான். உலகிலேயே சிறந்த உறவு எதுவென்றால் தாய்க்கும், குழந்தைக்கும் இடையில் உள்ள உறவுதான். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். அன்னையர் தினத்தை முன்னிட்டு ஆகாஷ் மருத்துவமனையில் பிறந்த 300க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறப்பு பரிசோதனை முகாம் நடந்தது. முடிவில் டாக்டர் நிவேதிதா ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


× RELATED ஆகாஷ் மருத்துவமனையில் 500 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை