×

ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றபோது 50அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பென்னலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவரது மனைவி ஜெயலட்சுமி (35). ஆடுகள் வளர்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களது ஆடுகளை மேய்சலுக்காக அப்பகுதி  வயல்வெளி பகுதிக்கு கொண்டு செல்வது வழக்கம்.நேற்று முன்தினம் ஜெயலட்சுமி வயல்வெளிக்கு ஆடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் சென்றார். அப்போது விவசாய நிலத்திற்கு அருகில் சுற்றுச்சுவர் இல்லாத பாழடைந்த 50 அடி கிணற்றில் ஜெயலட்சுமி தவறி விழுந்தார்.  இவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் குதித்து அவரை கரையோரம் கொண்டு சென்றனர். கிணற்றில் இருந்து மேலே ஏறி வருவதற்கு வழி இல்லாததால் உத்திரமேரூர் தீயணைப்பு துறையினருக்கு  தெரிவித்தனர்.

தகவலறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்த ஜெயலட்சுமியை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். பின்னர் காயமடைந்த ஜெயலட்சுமியை உத்திரமேரூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று  சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி ஜெயலட்சுமியை பத்திரமாக மீட்ட இளைஞர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Tags : farmland , sheep , driven ,pasture , farm
× RELATED கொள்ளிடத்தில் தொடர்ந்து...