×

ஆலந்தூர் பகுதியில் அரைகுறை கால்வாய் பணியால் விபத்து: வாகன ஓட்டிகள் அவதி

ஆலந்தூர்: ஆலந்தூர்  எம்.கே.சாலை -  ரயில்வே  ஸ்டேஷன் சாலை சந்திப்பில் அரைகுறை மழைநீர் கால்வாய் பணியால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர். சென்னை மாநகராட்சி 12வது மண்டலம், 160வது வார்டுக்கு உட்பட்ட ஆலந்தூர்  எம்.கே.சாலை -  ரயில்வே  ஸ்டேஷன் சாலை சந்திப்பில், மழைநீர் கால்வாய் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்  நடந்தது. அப்போது, ஒப்பந்ததாரர்  சரிவர பணிகளை முடிக்காததால், ஆங்காங்கே பணிகள்  அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டது.   குறிப்பாக, எம்.கே.சாலை - ரயில்வே ஸ்டேஷன் சாலை சந்திப்பு அருகே கால்வாய் கட்டுமான பணிகள் முழுமையாக நடைபெறாமல் கிடப்பில்  போடப்பட்டுள்ளது. இங்குள்ள பள்ளத்தில், பாதசாரிகள் அடிக்கடி தவறி விழும் சம்பவம் அதிகரித்து வந்தது.

மேலும், இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கால்வாய் பள்ளத்தில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டது. இதனால், அந்த பள்ளத்தில் பேரிகார்டுகளை போட்டு வைத்துள்ளனர்.  எனவே, அரைகுறையாக விடப்பட்ட மழைநீர் கால்வாய் பணிகளை முழுமையாக முடித்து தருமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், கால்வாய் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.  எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அரைகுறை கால்வாய் பணிகளை விரைந்து முடித்து தர ஒப்பந்ததாரருக்கு   உத்தரவிட வேண்டும், என வலியுறுத்தி உள்ளனர்.


Tags : area ,Halfway Canal Worker ,Accident ,Alandur , Alandur, Halfway, Canal Worker ,Accident,suffering
× RELATED திருமயம் பகுதியில் விபத்தை...