தோனி கிரிக்கெட் உலகின் சகாப்தம் : ஹேடன் புகழாரம்

எம்.எஸ்.தோனி ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, கிரிக்கெட் உலகில் ஒரு சகாப்தம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான மேத்யூ ஹேடன் கூறியுள்ளார்.ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு இடையே ஹைதராபாத் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளதால், இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

alignment=இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி குறித்து மேத்யூ ஹேடன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். , தோனியை உங்களுக்கு தெரியும். அவர் ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல. கிரிக்கெட் விளையாட்டின் ஒரு சகாப்தம். பல வகையில் யோசித்தாலும், நம்ம ஏரியா கிரிக்கெட் அணியின் கேப்டனை போலவே தோனி தெரிகிறார். அவர் நம்முள் ஒருவர். அவரால் எதனையும் செய்ய முடியும்.

alignment=


நண்பர்களுடனும், குடும்பத்தினுடனான வாழ்க்கையில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் நம்மால், தோனியை நம்முடன் எளிதில் பிணைத்துக் கொள்ள முடிகிறது. ஏனெனில், அவர் உங்களை அமைதிப்படுத்த வைக்கிறார். உங்களை ரிலாக்ஸாக வைக்கிறார். அதனால்தான் அவர் தல தோனி. தல  என்ற சொல் சென்னைக்கு தலைவர் என்பதை தான் குறிக்கும். ஆனால், கிரிக்கெட் உலகில் தேசத்திற்கே அவர்தான் தலையாக உள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.


Tags : Dhoni ,Hayden , matthew hayden, ms dhoni, hayden, dhoni thala, matthew hayden on dhoni, csk vs mi, ipl 2019 finals, ipl 2019, ipl news
× RELATED முன்னாள் கேப்டன் தோனியின் எதிர்காலம்...