×

விண்வெளிக்கு சென்ற ‘முதல் தாய்’ என்ற பெருமையை சொந்தமாக்கிய அமெரிக்காவின் விண்வெளி வீராங்கனை அன்னா லீ பிஷர்

அமெரிக்கா: விண்வெளிக்கு சென்ற ‘முதல் தாய்’ என்ற பெருமையை அமெரிக்காவின் விண்வெளி வீராங்கனை அன்னா லீ பிஷர் பெற்றுள்ளார். கடந்த 1983ம் ஆண்டு அன்னா உள்பட 6 பெண்கள் விண்வெளிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின்னரே அவர்கள் விண்வெளிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அன்னா எட்டரை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், தாய்மை அடைந்ததற்கான உடல் சோர்வுகளையும் பொருட்படுத்தாது, சக வீராங்கனைகளுடன் பயணிக்க தயாரானார்.

விண்வெளி வீரர்களுக்கான ஆடைகளை அணிந்துபடி உற்சாகத்துடன் சென்று திரும்பிய அவர், சில வாரங்களிலேயே தனது மகள் கிறிஸ்டினை) பெற்றெடுத்தார். வார இறுதி நாள் ஓய்வுக்கு பின், மீண்டும் பணிக்கு திரும்பிய அவரது தன்னம்பிக்கையை அனைவரும் வியப்புடன் பாராட்டியதை தற்போது, 16 மாத குழந்தைக்கு தாயான அவரது மகள் கிறிஸ்டின் நினைவு கூர்ந்துள்ளார்.

Tags : Anna Lee Fischer ,American ,First Mother , Anna Lee Fischer,American,astronaut, owns, 'First Mother'
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...