×

இங்கிலாந்தில் முன்விரோதம் காரணமாக ஐதராபாத் இளைஞரை குத்திக்கொன்ற பாகிஸ்தான் நாட்டவர் கைது

இங்கிலாந்து: இங்கிலாந்தில் முன்விரோதம் காரணமாக ஐதராபாத் இளைஞரை குத்திக்கொன்ற பாகிஸ்தான் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் பெர்க்ஷைர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக வேலைப்பார்த்து வந்த நடீம் உதின் ஹமீத் முகமத் கடந்த 8ம் தேதி, சூப்பர் மார்க்கெட் அருகிலுள்ள வாகன நிறுத்தும் இடத்தில் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்தநிலையில் சூப்பர்மார்க்கெட் வளாகத்திலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், பாகிஸ்தானை சேர்ந்த அகிப் பெர்வாய்ஸ் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் நதீம் மேலாளராக இருந்த சூப்பர்மார்க்கெட்டில், அகிப் வேலை பார்த்து வந்ததும், சரியாக வேலை செய்யாததால் கடந்த 2 வாரத்துக்கு முன் வேலையிலிருந்து அகிப் நீக்கப்பட்டதும், பழிவாங்கும் முயற்சியாக நதீமை குத்திக்கொன்றதும் தெரிந்தது. இதுதொடர்பான வழக்கு வரும் சனிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நதீமின் மாமியார் லண்டன் செல்வதற்கான விசா ஏற்பாடுகளை செய்து கொடுக்கவேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு தெலங்கானா உள்துறை அமைச்சர் மக்மூத் அலி கடிதம் எழுதியுள்ளார்.

Tags : arrest ,Pakistani ,Hyderabad , arrest ,Pakistani national,Hyderabad, arresting, youth
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.