×

மியான்மர் ஏர்லைன்ஸ் லேண்டிங் கியர் பழுது ஏற்பட்டதும் சாதுரியமாக செயல்பட்ட விமானி

மாண்டலே: மியான்மர் ஏர்லைன்ஸ் விமானத்தில், லேண்டிங் கியர் பழுது ஏற்பட்ட போது விமானி சாதுரியமாக செயல்பட்டதால் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். 89 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் மியான்மர் ஏர்லைன்ஸ் விமானமானது மாண்டலே நகர் சென்றுக் கொண்டிருந்து. தரை இறக்கத்தின் போது முன் பக்க லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இரண்டு முறை முயற்சி மேற்கொண்ட போதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன் பக்க சக்கரம் வெளியே வராததால் பின்பக்கம் இருக்கும் சக்கரங்கள் உதவியுடன் மட்டுமே தரை இறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இதை அடுத்து விமானி சாதுரியமாக செயல்பட்டு பின் பக்க சக்கரங்கள் மூலம் விமானத்தை தரை இறக்கினார். இந்நிலையில் விமானம் தரை இறங்கியதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். தரையிறங்கிய பின் கோளாறான முன் பக்க டயா் பழுது நீக்கப்பட்டது.


Tags : Myanmar ,Air Lines, Land, Gear Repair ,Tweezer
× RELATED காந்தி நகரில் போட்டியிடும் அமித்...