×

சென்னை அருகே சூப்பர் மார்க்கெட்டில் மின்கசிவு காரணமாக தீவிபத்து

சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஏற்பட்ட தீ விரைந்து அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இன்று காலை 7 மணி அளவில் பெட்ரோல் பங்க் வளாகத்திலேயே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.   

இதனால் பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீவிபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இதுதொடர்பாக பரங்கிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fire ,supermarket ,Chennai , Chennai, Super Market, Miniccu, Fire
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா