×

வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்...... சீனாவை எச்சரிக்கும் டிரம்ப்

வாஷிங்டன்: வர்த்தக ஒப்பந்தத்தில் இப்போதே கையெழுத்திடவில்லை என்றால், 2020க்கு பின்னர் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்று சீனாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின்னர் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் என்று சீனா எண்ணுவதாகக் கூறியுள்ளார்.

2020-ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் சீனாவுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஜனநாயகக் கட்சி வெற்றி பெறும் என்று தெரிவித்த டிரம்ப், ஆனால் வெல்லப் போவது தாம் தான் என்றும் குறிப்பிட்டார். எனவே 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக தாம் பதவிக்கு வந்தால் சீனாவின் நிலைமை மேலும் மோசமாகி விடும் என்றும்  எச்சரித்துள்ளார். இதன்மூலம் இருநாடுகளிடையே மீண்டும் வார்த்தைப்போர் தொடங்கியுள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பாடாவிடில் வர்த்தகப்போர் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags : Trump ,China , Donald Trump, China, Trade Deal
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்