×

வயநாடு அருகே சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

பந்தலூர் :  பந்தலூர் அருகே கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முத்தங்கா புலிகள் காப்பகம் பகுதியில் சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை குட்டியை  வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.  கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முத்தங்கா புலிகள் காப்பகம் பகுதியில் பளூர் வனச்சரத்திற்குட்டபட்ட அயனிபறா என்ற இடத்தில்  காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க, வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அகலியில் சுறுக்கு கம்பியில் மாட்டி சிறுத்தை ஒன்று நேற்று முன்தினம் உயிருக்கு போராடி கொண்டிருந்தது, அப்போது ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் இதனை பார்த்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் சம்பவ இடத்திற்கு வயநாடு மாவட்ட வன அலுவலர் ஆசிப், ரேஞ்சர் அஜய்கோஸ், முத்தங்கா புலிகள் காப்பகம் கால்நடை மருத்துவர் அருண்சக்காரியர் மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் இருந்து ஒரு கிமீ தூரமுள்ள நம்பியார் குன்னு அருகே சம்பவம் நடந்துள்ளதால் பிதர்காடு வனகாப்பாளர்கள் ராமச்சந்திரன், காளன், வனகாவலர் தம்பகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

சுறுக்கு கம்பியில் சிக்கியிருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி கழுத்தில் சிக்கியிருந்த கம்பியை நீக்கி சிறுத்தைக்கு சிகிச்சை அளித்தனர். அதன் பின் சிறுத்தையை முத்தங்கா புலிகள் காப்பகம் வனசரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சுறுக்கு கம்பியில் சிக்கிய  ஆண் சிறுத்தைக்கு இரண்டு வயது இருக்கும் என கால்நடை மருத்துவர் தெரிவித்தார். சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : leopard recovery ,Wayanad , leopard ,Wayanad,recovery , panthalur,kerala
× RELATED ராகுல்காந்தி மீதுள்ள அச்சம்...