×

திருத்தணியில் 108 டிகிரி தொடர்ந்து சதம் போடும் வெயில்: 10 இடங்களில் தகிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று 10 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது.  தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர நாட்களில் அதிகபட்ச வெயில் பதிவாகும். மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. ஆனால் அதற்கு முன் மார்ச் மாதம் முதலே, தமிழகத்தில் வழக்கமாக  பதிவாகும் வெப்பநிலையை விட கூடுதலாக வெப்பநிலை பதிவானது. இந்நிலையில் மே 4ம் தேதி முதல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக ெவப்பநிலை  பதிவாகி வருகிறது.

இந்நிலையில் நேற்றும் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. நேற்று மாலை 5.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 108.50  டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து வேலூர்- 108.14, கரூர் பரமத்தி - 106.70, பாளையங்கோட்டை- 104.90, மதுரை விமான நிலையம், சேலம், திருச்சி- 104.72, சென்னை விமான நிலையம் - 102.56,  நாகப்பட்டினம் - 101.12, நாமக்கலில் 100.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்பசலனம், காற்றுதிசை வேகமாறுபாடு காரணமாக ஊட்டியில் 22.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மழை வருமா...வராதா?
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த  இடங்களில் மழையின் போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அதே ேபால், மே 14ம் தேதி ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, சுற்றுவட்டார  பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100.40 டிகிரி வரை பதிவாகும். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு  மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : places , 108 degrees , edition, Weight, tolerance
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...