×

நடுவானில் பறந்து கொண்டிருக்கையில் 2 ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் திடீர் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் பாதிப்பு

மும்பை: வானில் பறந்து கொண்டிருந்த இரண்டு ஸ்பைஸ் ஜெட் போயிங் விமானங்களில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஒரு விமானம் புறப்பட்ட இடத்துக்கு திரும்பியது. மற்றொன்று நாக்பூரில் தரையிறக்கப்பட்டது.  பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டனர்.ஸ்பைஸ் ஜெட் விமானம் (ஃப்ளைட் எஸ்.ஜி.-611) ஒன்று நேற்று காலை 7.30 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. சுமார் 16 நிமிட நேரம் வானில் பறந்த  நிலையில் அதில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த விமானம் மும்பை விமான நிலையத்துக்கே திரும்பியது. பொறியாளர்கள் அந்த விமானத்தை பழுதுபார்த்த பிறகு அது மீண்டும் காலை 10  மணிக்கு சென்னை புறப்பட்டுச் சென்றதாக ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

இதேபோல மற்றொரு ஸ்பைஸ் ஜெட் விமானம் (ஃப்ளைட் எஸ்.ஜி.-8720) பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. நடுவானில் அந்த விமானத்திலும் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த  விமானம் நாக்பூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. அதன் பிறகு வேறு ஒரு விமானம் நாக்பூர் அனுப்பப்பட்டு அந்த விமானத்தில் அனைத்து பயணிகளும் ெடல்லி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : SpiceJet ,flights , Flying, 2 SpiceJet, flights
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...