விமானப்படைக்கு முதல் அபாச்சி ஹெலிகாப்டரை டெலிவரி செய்தது போயிங்

புதுடெல்லி: முதல் அபாச்சி ஹெலிகாப்டரை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்துள்ளது. அமெரிக்கா ராணுத்தில் ஏஎச்-64ஈ அபாச்சி ரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது. எதிரிகளின் இலக்குகளை தாக்குவதில் இந்த ஹெலிகாப்டர் முன்னணியில் இருக்கிறது. இதை அமெரிக்காவின் போயிங் நிறுவனம்  தயாரிக்கிறது. இந்த ரக ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படைக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2015ம் ஆண்டு 22 அபாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க போயிங் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.  மூன்றரை ஆண்டுகளுக்குப் பின், முதல் அபாச்சி ஹெலிகாப்டரை, இந்திய விமானப்படையிடம் போயிங் நிறுவனம் நேற்று முறைப்படி ஒப்படைத்தது. முதல் பகுதியாக அனுப்பப்படும் சில ஹெலிகாப்டர்கள் வரும் ஜூலை  மாதத்துக்குள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான பயிற்சியை இந்திய விமானப் படையினர் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் உள்ள அமெரிக்க ராணுவ பயிற்சி மையத்தில் பெற்று வருகின்றனர். இந்திய விமானப்படையின்  எதிர்காலத் தேவைகளை இந்த அபாச்சி ஹெலிகாப்டர்கள் நிறைவேற்றும். மேலும், உயரமான மலைப் பகுதிகளில் இருந்து தரை இலக்குகள் மீது தாக்குதல் நடத்த இந்த ஹெலிகாப்டர்கள் மிகவும் உதவியாக இருக்கும் என  விமானப்படை தெரிவித்துள்ளது.தரைப்படைக்கும் 6 ஹெலிகாப்டர்

தரைப்படை பயன்பாட்டுக்காக மேலும் 6 அபாச்சி ஹெலிகாப்டர்களை ஆயுதங்களுடன் சேர்த்து ரூ.4,168 கோடிக்கு வாங்க பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2017ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்த ஹெலிகாப்டர்களுக்கான உடல்  பகுதியை மட்டும், கூட்டு தயாரிப்பில் ‘டாடா போயிங் ஏரோஸ்பேஸ் லிமிடெட்’ ஐதராபாத்தில் தயாரிக்க உள்ளது. இன்ஜின், இதர கருவிகள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இணைத்து கொடுக்கும்.

Related Stories: