×

முதல் முறையாக நாட்டிலேயே அதிக அளவாக 400 கோடி மதிப்பிலான போதை மருந்து சிக்கியது

கிரேட்டர் நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் போதைப் பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1,800 கிலோ எடை கொண்ட போதை மருந்து சிக்கியது. சிக்கிய போதைப் பொருளின்  மதிப்பு ₹400 கோடி என அதிகாரிகள் கூறியுள்ளனர்.தென்னாப்பிரிக்கா பெண் பயணி ஒருவர், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரிடம் கடந்த 9ம் தேதி சிக்கினார். அவரிடம் 24.7 கிலோ எடை கொண்ட சூடோஎபிட்ரின்  எனும் மருந்து இருந்தது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட இந்த பொருள்தான் போதை மருந்து தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருளாகும்.

பெண்ணிடம் டெல்லி மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணை அடிப்படையில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் அப்பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் ரெய்டுக்கு சென்றனர்.  அந்த வீட்டில் 1,818 கிலோ சூடோஎபிட்ரின் மூலப்பொருள் பொட்டலம் கட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதோடு, கொகைன் போதை மருந்தும் 1.9 கிலோ (₹24 கோடி மதிப்பு) அங்கிருந்தது தெரிந்தது. இதை பறிமுதல் செய்தனர். இரண்டு போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றிய போதை பொருளின் சர்வதேச மதிப்பு ₹400 கோடி.  வீட்டிலிருந்த நைஜீரிய நாட்டு ஆணும், பெண்ணும் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர  விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒரு வீட்டில் இவ்வளவு எடையில் போதை பொருள் இருந்தது ரெய்டுக்கு சென்றவர்களை மலைக்க வைத்தது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags : country , country, 400 crores, drug ,trapped
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!