×

செவிலியர்களை கவுரவிக்க வேண்டும்: வைகோ அறிக்கை

சென்னை: செவிலியர் தினத்தில் செவிலியர்களை கவுரவிக்க வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செவிலியர் தின வாழ்த்து: நவீன தாதியியல் முறையை உருவாக்கி முதலில் செவிலியர் பயிற்சி பள்ளியைத் துவக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ம் நாளை 1965ம் ஆண்டு முதல் உலக செவிலியர் தினமாக அறிவிக்கப்பட்டது. செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; தொண்டு. ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளில் இருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும் சகிப்புத் தன்மையும் கொண்டு மனித அசிங்கங்களைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆற்றும் மகத்தான சேவை செவிலியர் பணி ஆகும். ராணுவம், காவல்துறை போன்று இவர்களும் சீருடைப் பணியாளர்களே. இதை நினைவுகூர வேண்டியது நமது சமூகக் கடமையாகும். எனவே பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களைத் தேர்வு செய்து மத்திய - மாநில அரசுகள் மே 12ம் நாளில் அவர்களைக் கவுரவிப்பதே நன்றி கடனாகும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : nurse nurses , Wishing to nurse nurses: Vaiko Report
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி