×

வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடைபெறும் நிலையில் வெற்றி வேட்பாளர் 24ம் தேதி அறிவிப்பு?: ‘விவிபேட்’ ஒப்புகை சீட்டு சரிபார்ப்பால் தாமதம்

* வித்தியாசம் இருந்தால் ‘இவிஎம்’ பதிவு செல்லாது

சென்னை: நாடு முழுவதும் 7 கட்ட வாக்குப்பதிவு முடிந்தபின், வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், ‘விவிபேட்’ ஒப்புகை சீட்டு சரிபார்பார்ப்பால் வெற்றிப் பெற்ற வேட்பாளர் யார் என்பது 24ம் ேததிதான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இதில், ‘இவிஎம்’ மற்றும் ‘விவிபேட்’ இயந்திரங்களில் ஓட்டு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால், ‘விவிபேட்’ பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டும், ‘இவிஎம்’ பதிவு செல்லாத ஒன்றாக அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. மக்களவை தேர்தல் 5 கட்டங்கள் முடிந்த நிலையில், நாளை 6ம் கட்டமாக 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. தொடர்ந்து வருகிற 19ம் தேதி 7ம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முன்னதாக வாக்குப்பதிவு முடிந்த தொகுதிகளில், 4 அடுக்கு பாதுகாப்புடன் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில், வாக்கு எண்ணிக்கை நாளன்று சில நடைமுறைகள் பின்பற்றப்படும். அதாவது, வாக்கு எண்ணிக்கை நாளான வரும் 23ம் தேதி காலை 7.30 மணிக்குள் தபால் வாக்குச் சீட்டுகள் எடுத்து வரப்பட்டு 8 மணிக்குள் எண்ணும் பணி தொடங்கும். அதேநேரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்து வரப்பட்டு 8.30 மணிக்குள் எண்ணிக்கை தொடங்கும். மொத்தம் 14 மேஜைகளில் தலா ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் என மூவர் பணியமர்த்தப்படுவர். ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும், வேட்பாளர்களின் முகவர்களிடமும் காண்பித்து வாக்கு எண்ணிக்கையை தெரிவிப்பர். ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளின் முன்னணி நிலவரம் சுமார் மதியம் 1 மணிக்குள் தெரிந்துவிடும். ஆனால், இந்த தேர்தலில் நாடு முழுவதும் யாருக்கு வாக்களித்தோம் என்று தெரியும் ‘விவிபேட்’ என்ற புதிய நடைமுறை பின்பற்றப்படுவதால், வேட்பாளர்களின் முன்னணி நிலவரங்கள் வெளியாக தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தலைமையிலான 21 எதிர்க்கட்சிகள், ‘விவிபேட் ஒப்புகைச் சீட்டுக்களை 50 சதவீதம் எண்ண வேண்டும்’ என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 8ல் வழங்கப்பட்ட நிலையில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், `ஏற்கெனவே நாங்கள் அறிவித்த உத்தரவில் மாற்றமில்லை. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளைச் சரிபார்த்தால் போதுமானது. இது தொடர்பாக நீங்கள் தேர்தல் ஆணையத்தைத் தொடர்புகொள்ளுங்கள்’ என்று கூறி எதிர்க்கட்சிகளின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புதிய கோரிக்கையை முன்வைத்தனர். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில், `உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். தேர்தல் ஆணையத்தில் எங்களின் கோரிக்கையை முன்வைத்தோம். ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் ‘விவிபேட்’டுடன் சரிபார்க்கும்போது ஏதாவது ஒரு இடத்தில் எண்ணிக்கையில் மாற்றம் இருந்தால்கூட மொத்த சட்டமன்றத் தொகுதியிலும் ‘விவிபேட்’ இயந்திரத்துடன் சரிபார்க்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இருந்தும், தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் அறிவித்த வழிகாட்டல் முறைகளையே, இந்த வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப் போகிறது என்றே தெரிகிறது. அதன்படி, வாக்கு எண்ணும் மையத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பின் ஒரு சட்டசபை தொகுதிக்கு தலா 5 ‘விவிபேட்’ இயந்திரம் என ஒரு மக்களவைத் தொகுதியில் குறைந்தது 30 ‘விவிபேட்’ இயந்திரங்களை தனியாக எடுத்து அதில் உள்ள யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள 1,800 ‘விவிபேட்’ இயந்திரங்களில் சுழற்சி முறையில் 30 இயந்திரங்களை தனியாக எடுத்து அதில் உள்ள ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும். ஒரு ‘விவிபேட்’ இயந்திரத்தை எண்ணுவதற்கு சுமார் ஒன்றரை மணி நேரமாகும். இந்த எண்ணிக்கையும் அதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் ஒட்டு மொத்தமும் சரியாக இருப்பதை உறுதி செய்து பின் வெற்றி விவரம் அறிவிக்கப்படும். தபால் வாக்குகளை தனி பணியாளர்கள் எண்ணுவர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எண்ணுபவர்களே விவிபேட் ஒப்புகைச்சீட்டு விவரத்தையும் எண்ணி அறிவிப்பர். இவ்வாக்கு எண்ணும் நடைமுறைகள் முழுவதுமாக கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் அச்சுற்றில் பெறப்பட்ட வாக்குகள் விபரத்தினை அறிவிப்பு பலகையில் எழுதப்படும்.

 இவைதவிர ஒவ்வொரு சுற்றுக்கான விபரம் அந்தந்த வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்படும். மேலும் இவ்விபரங்கள் ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. தற்போது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையங்களில் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து, அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். இதுகுறித்து, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் சுமார் 25 மணி நேரத்திற்கு பிறகே அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை வெளியிட முடியும். அதாவது மக்களவை தொகுதி தேர்தல் முடிவு மறுநாள் (24ம் தேதி) காலை 9 மணியளவில் தெரியவரும். இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளின் முடிவுகள் 23ம் தேதி மாலை அறிவிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் (இவிஎம்), ‘விவிபேட்’ இயந்திரத்திலும் வாக்கு எண்ணிக்கையில் ஒருவேளை வித்தியாசம் இருந்தால் ‘விவிபேட்’டில் பதிவாகிய வாக்குகளே இறுதியாக எடுத்து கொள்ளப்படும். ‘இவிஎம்’ பதிவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதுெதாடர்பான ஆலோசனைகள், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும், தேர்தல் பார்வையாளர் ஒருவரும் நியமிக்கப்படுவர். இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

வாக்கு எண்ணிக்கை ஹைலைட்ஸ்
* நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன.
* மொத்த சட்டசபை தொகுதிகள் 4,120ல், தலா 5 சட்டசபை தொகுதி வீதம் மொத்தம் எண்ண வேண்டிய ‘விவிபேட்’ இயந்திரம் எண்ணிக்கை 20,600.
* நாடு முழுவதும் 10.35 லட்சம் வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு 800 முதல் 2,500 ஓட்டுகள் இருக்கும்.
* மொத்தம் எண்ண வேண்டிய ‘இவிஎம்’ இயந்திரம் 39.6 லட்சம்.
* ேதர்தலில் பயன்படுத்தப்பட்ட ‘விவிபேட்’ இயந்திரம் 17.4 லட்சம்.

Tags : Candidate ,Announcement ,VVIPPAT , The number of votes will be held on March 23 Winner Candidate 24th Announcement ?: 'Vivipat' acknowledged by acknowledgment slip check
× RELATED கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை:...