×

போச்சம்பள்ளி அருகே கோடிபதி பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மன் தாலி, உண்டியல் கொள்ளை

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கோடிபதியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. வருடந்தோறும் வைகாசி மாதம் இங்கு திருவிழா விமரிசையாக நடைபெறும். அப்போது 5 ஆயிரம் ஆடுகள், 2000 பன்றிகள் வரை பலியிடப்படும். சுமார் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர். இதுமட்டுமின்றி ஒவ்வொரு அமாவாசையிலும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

இந்நிலையில் நேற்று இரவு இந்த கோயிலின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், உள்ளே புகுந்து நகை, பணம் தேடியுள்ளனர். எதுவும் கிடைக்காத நிலையில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி, உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை அந்த வழியாக சென்ற பக்தர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பழுதாகி உள்ளது. இதையறிந்தவர்கள் தான் கொள்ளையடிக்க வந்துள்ளனர். வைகாசி மாதம் பிறக்க உள்ள நிலையில், திருவிழா நடத்துவதற்காக அம்மன் நகைகள் கோயில் நிர்வாகி வீட்டில் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அம்மன் நகைகள் தப்பின.

Tags : Kotakita Bhadrakaliyamman ,temple ,Pochampalli , Ripple, robbery, pochampalli
× RELATED மதுராந்கதம் ஏரிகாத்த ராமர் கோயிலில்...