×

திங்கள்நகர் சந்தையில் கட்டி முடிக்கப்பட்ட இ-சேவை மையத்தை திறக்காவிடில் போராட்டம்: பிரின்ஸ் எம்எல்ஏ அறிவிப்பு

திங்கள்சந்தை: பிரின்ஸ் எம்எல்ஏ மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திங்கள்நகர் பேரூராட்சிக்கு சொந்தமான திங்கட்கிழமை வாரச்சந்தை, தினசரி சந்தை, மீன் சந்தை பஸ் நிலையத்தையொட்டி செயல்பட்டு வருகிறது. இங்கு தலக்குளம் சாலையில் சந்தையின் முன்பக்க கேட் அருகில் கட்டிமுடிக்கப்பட்ட இ-சேவை மையம் தற்போது காட்சி பொருளாக உள்ளது. ஆனால் இந்த கட்டிடத்தை திறந்து செயல்படுத்தாமல் பல மாதங்களாக பூட்டிக்கிடக்கிறது. இ-சேவை மையத்தை திறந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அதிகாரிகள் இதுவரை செவிசாய்க்கவில்லை.

அதுபோல சந்தையில் வியாபார பொருட்களை விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளிடம் இருந்து பேரூராட்சி நிர்வாகம் நிர்ணயித்துள்ள தீர்வை கட்டணத்தைவிட இருமடங்கு, மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக சந்தை வியாபாரிகளிடம் இருந்து பல்வேறு புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக திங்கள்நகர் பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. திங்கள்நகர் பேரூராட்சி நிர்வாகம் சந்தையின் வாசல்களில் தீர்வை கட்டணம் தொடர்பான விளம்பர பலகைகளை நிறுவிட வேண்டும். அதுபோல நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தையில் நிலவிவரும் சுகாதார சீர்கேட்டினை சரிசெய்ய வேண்டும். மேலும் சந்தையில் உள்ள இ-சேவை மையத்தையும் உடனடியாக திறந்து செயல்படுத்த வேண்டும். தவறினால் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Prince ,Announcement ,Market Market ,MLA , E-service center, fight
× RELATED ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு