×

சமூக வலைதளங்களில் டேட்டிங் சார்ந்த விஷயங்களை தேடுபவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம்: கூகுள் நிறுவனம் தகவல்

டெல்லி: சமூக வலைதளங்களில் டேட்டிங் சார்ந்த விஷயங்களை தேடுபவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளனர்.  கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி; 2017-ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் டேட்டிங் தேடுவோர் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல மேட்ரிமோனி எனப்படும் திருமண தகவலை தேடுவோர் எண்ணிக்கையும் 13% சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் இது தொடர்பான தகவல்களை தேடினர் என்ற சரியான விபரத்தை கூகுள் வெளியிடவில்லை.  

பிப்ரவரி மாதத்தில் 6 ஆயிரம் இந்தியர்களிடம் கூகுள் நடத்திய ஆய்வில், தாங்கள் காதலை தேடுவதாக 92 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ரொமான்டிக் இரவு உணவுடன் காதலை சொல்ல விரும்புவதாக 21 சதவீதம் பேரும், பரிசுகள் தந்து காதலை சொல்ல விரும்புவதாக 34 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

2018 ம் ஆண்டில் ஸ்விகி, சோமாட்டோ உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்கள் மற்றும் உணவு தொடர்பான கேள்விகளை தேடுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் இரு மடங்காக அதிகரித்துள்ளது கூகுள் தெரிவித்துள்ளது. அதிகம் தேடப்பட்ட உணவுப் பொருட்களில் பீட்சா முதலிடத்தில் உள்ளது. யூட்யூப்பில் தேடப்பட்ட விஷயங்களில் அறிவியல், பொழுதுபோக்கு, சமையல், அழகுக் குறிப்புக்கள் ஆகியன முன்னணியில் உள்ளன என கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : India ,Google , Social website, dating, first place in India, Google company
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!