சென்னை ஆதம்பாக்கத்தில் ஆர்.எஸ்.பாரதி மனைவியிடம் நகை பறிக்க முயற்சி

சென்னை: சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி மனைவியிடம் நகை பறிக்க முயற்சி நடந்துள்ளது. ஆர்.எஸ்.பாரதி மனைவி சம்பூர்ணம் வீட்டின் அருகே நடந்து சென்ற போது பைக்கில் வந்தவர்கள் செயினை பறிக்க முயற்சி செய்துள்ளனர். செயினை பறிக்க விடாமல் சம்பூர்ணம் தடுத்ததால் பைக்கில் வந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். சம்பூர்ணம் அளித்த புகாரின் பேரில் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : RS Bharathi ,Madras , Try to snatch jewelry, RS Bharathi
× RELATED கவனத்தை திசைதிருப்பி நகை பறித்த தாய், மகள் உட்பட 3 பேர் கைது