×

மண்மங்கலம் தாலுகா அலுவலக நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் அவதி

கரூர் : மண்மங்கலம் தாலுகா அலுவலக நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் அருகே உள்ள மண்மங்கலத்தில் தாலுகா அலுவலகம் உள்ளது. தாலுகா எல்லைக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சான்றிதழ்கள் பெறவும், உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கவும் வந்துசெல்கின்றனர்.

பொதுமக்கள் வசதிக்காக நகர பேருந்துகள் தாலுகா அலுவலகம் முன்பு பைபாஸ் சாலை நிறுத்தத்தில் நின்று செல்கிறது. காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை இல்லை. இதனால் வெயிலிலும், மழையிலும் நிற்கவேண்டியதிருக்கிறது. தாலுகா அலுவலகம் தொடங்கிய நாள்முதல் இந்த கோரிக்கையை வைத்துக்கொண்டிருக்கிறோம். அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இனியாவது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிழற்குடை அமைக்க வேண்டும்என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : passengers ,office , karur, bus stop, passengers, manmangalam
× RELATED சேலம் – கொச்சி விமானம் திடீர் ரத்து: 50...