×

மொரப்பூர் பகுதியில் தண்ணீரின்றி காய்ந்த தென்னை மரங்கள்

* விவசாயிகள் வேதனை

அரூர் :  மொரப்பூர் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை  அடைந்துள்ளனர்.அரூர் அருகே மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர், திப்பம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரகணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை மற்றும் பாக்கு மரங்களை சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3ஆண்டுகளாக பருமழை பொய்த்து போனதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து அணைகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் தென்னை மரங்கள் அனைத்தும் காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. இதனால் சில விவசாயிகள் காய்ந்த தென்னை மரங்களை வெட்டி, குறைந்த விலைக்கு விற்பனைக்கு அனுப்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 3ஆண்டுகளாக கிணற்றில் சுத்தமாக தண்ணீர் இல்லை. மழை பொழிவும் இல்லாததால், தென்னைக்கு கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. காலப்போக்கில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால், தென்னை மரங்கள் முற்றிலுமாக காய்ந்து விட்டன. இதனால் கடந்த 15ஆண்டுகளாக வளர்த்த தென்னை மரங்கள், பலன் தரும் தருவாயில் காய்ந்தால், எங்களது வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : area ,Morpore , Morapore , arur, oconut trees, dried up
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது