×

விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையில் உள்ள சர்வரில் பழுது... அரசுக்கு ரூ.4.5 கோடி இழப்பு

சென்னை: சர்வரில் ஏற்பட்ட பழுது காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 218 டாஸ்மாக் கடைகளுக்கும் மது பாட்டில்கள் அனுப்புவது தடைபட்டது. இதனால் ஒரே நாளில் அரசுக்கு ரூ.4.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 218 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 10 ஆயிரம் அட்டை பெட்டிகள் பிராந்தி, பீர் பாட்டில்கள் ரூ.2.50 கோடிக்கு விற்பனையாகும். அருகில் புதுச்சேரி இருந்தாலும் டாஸ்மாக் விற்பனையில் இம்மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது.

இதனிடையே தினமும் கடைகளுக்கு 15 ஆயிரம் அட்டைப்பெட்டிகள் பீர் மற்றும் பிராந்தி பாட்டில்கள் விழுப்புரம் டாஸ்மாக் குடோனிலிருந்து பில்போட்டு அனுப்பிவைக்கப்படும். இதனிடையே நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. பயங்கர சத்தத்துடன் இடி, இடித்த நிலையில் டாஸ்மாக் குடோனில் பில்போடப்படும் அனைத்து கணினிகளும் பழுதாகின. இந்த நிலையில் நேற்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் கணினி இயங்காததால் கடைகளுக்கு பிராந்தி, பீர் பாட்டில்கள் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டது.

நேற்றைய தினம் திண்டிவனம், மரக்காணம், வானூர், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கடைகளுக்கு சரக்கு சப்ளை செய்ய வேண்டும். ஆனால் கணினி பழுது காரணமாக பில்போடமுடியாததால் கடைகளுக்கு சரக்கு சப்ளை செய்வது நிறுத்தப்பட்டது. பின்னர் சென்னையிலிருந்து நேற்று மாலைதான் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு கணினி சரிசெய்யும் பணி நடந்தது. இதனிடையே கடைகளுக்கு சரக்கு சப்ளை நிறுத்தப்பட்டதால் நேற்றைய தினம் டாஸ்மாக் வருவாயும் பாதியாக குறைந்தது. இதனால் ஒரே நாளில் அரசுக்கு ரூ.4.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : store ,Tollmachu ,government , Villupuram, Tashmk shop, government, loss
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!