அசாமில் இரு தரப்பினரிடையே மோதல்: ஊரடங்கு உத்தரவு அமல்

திஸ்பூர்: அசாமின் ஹைலகண்டி நகரில் நேற்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 15 பேர் படுகாயமடைந்த நிலையில் அங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அசாம் மாநிலம், ஹைலகண்டி நகரில் நேற்று இரு பிரிவினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதில் ஏராளமான வாகனங்கள், கடைகள் சேதமாகின. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.  இந்த மோதலில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. துணை ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் பிரிவு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை இரவு 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட்டது.

Related Stories:

>