×

ஆசிட் வீசி தம்பதியை கொன்றவருக்கு மரண தண்டனை

பால்கர்:  மும்பை அருகேயுள்ள பால்கரில் குட்டு கிரிஷ் யாதவ் (28) மற்றும் ராஜ்குமார் ரவிதாஸ் ஆகிய இருவரும் ஒரே கெமிக்கல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். கடந்த 2015ம்  ஆண்டு ராஜ்குமாரின் செல்போனை குட்டு கிரிஷ் திருடி விட்டார். இது குறித்து கம்பெனி முதலாளியிடம் புகார் சென்றாதால், ராஜ்குமாரை பழிவாங்க குட்டி கிரிஷ் முடிவு செய்தார். ஒரு வாளியில் 10 லிட்டர் ஆசிட்டையும் எடுத்துக்கொண்டு ராஜ்குமார் வீட்டுக்கு குட்டு கிரிஷ் சென்றார். தூங்கி கொண்டிருந்த ராஜ்குமார் மற்றும் அவர் மனைவி மீது ஆசிட்டை ஊற்றிவிட்டு குட்டு கிரிஷ் தப்பியோடினார். இதில் சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர். இந்த வழக்கில் குட்டு கிரிஷஅக்கு மரண தண்டனை விதித்து பால்கர் செசன்ஸ் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.


Tags : assassin , Acid thrown ,couple, death penalty
× RELATED கழுத்தை அறுத்து வாலிபர் கொலையான...