×

தனிப்பட்ட நபர்கள் கட்சியல்ல பாஜ: நிதின் கட்கரி பேட்டி

புதுடெல்லி: கடந்த 1976ம் ஆண்டு அவசரநிலை அமலில் இருந்த காலத்தில், அப்போதைய காங்கிரஸ் தலைவர் டி.கே.பரூவா கூறுகையில், ‘‘இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா’’ என்றார். அதே வரிசையில் மோடிதான் பா.ஜ, பா.ஜதான் மோடி என கூறப்படுவது பற்றி மத்திய அமைச்சர் நிதின்கட்கரியிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கட்கரி அளித்த பதிலில், ‘‘ஒரு தனிநபரை மையப்படுத்திய கட்சியாக பா.ஜ ஒரு போதும் இருக்க முடியாது. அடல் கட்சியாகவோ, அத்வானி கட்சியாகவோ இதற்கு முன் பா.ஜ இருந்ததில்லை. அதேபோல் இது அமித்ஷா அல்லது மோடி கட்சியாக ஒருபோதும் இருக்க முடியாது,’’ என்றார்.




Tags : Individuals ,party ,BJP ,interview ,Nitin Gadkari , BJP, Nitin Gadkari
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...