×

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்கள் மீது வரி 25% ஆக உயர்வு: பதிலடி தர சீனாவும் தயார்

வாஷிங்டன்: 20,000 கோடி டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் மீது வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக டிரம்ப் அதிகரித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்க தயார் என சீனாவும் அறிவித்துள்ளது.
 அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப்போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. ஏராளமான சீன பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் அமெரிக்க தொழில்துறையினர் பாதிக்கப்படுகின்றனர். இரண்டு நாடுகளிடையே வர்த்தக பற்றாக்குறை அதிகம் உள்ளது. இதை ஈடுகட்டவும், அமெரிக்க தொழில்துறையை பாதுகாக்கவும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ஸ்டீல், அலுமினியத்துக்கு வரி விதித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்தது. அதில் இருந்துதான் வர்த்தக போர் உச்சத்தை அடைந்தது.

 கடந்த ஆண்டு சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மீன், ஹேண்ட்பேக், துணிகள், காலணிகள் உட்பட 20,000 கோடி டாலர் (சுமார் 14,00,000 கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு 10 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இந்த வரி நேற்று 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு கவலை தெரிவித்துள்ள சீனா, அமெரிக்காவின் செயலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே வர்த்தகப்போர் கடும் உச்சத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளிடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த சீன துணை பிரதமர் லியு ஹி தலைமையில் உயர்மட்ட குழு அமெரிக்கா வந்துள்ளது. இந்த குழுவின் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை துவங்கிய நிலையில், டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு, பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.




Tags : China ,Chinese ,US , US, Chinese products, tax increases by 25%, China
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...