×

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தாமதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட உடனே அவர்களை விடுவிப்பதற்கான கோப்பில் தமிழக ஆளுநர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை 8 மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போட்டு வைத்திருப்பவர்கள் இனியும் காரணங்களை தேட முடியாது. இதற்கு மேலும் தாமதப்படுத்தினால் உச்ச நீதிமன்றத்தையும் அவமதிக்கும் செயலாகவே அது அமையும். எனவே, துளியும் தாமதமின்றி 7 பேரையும் விடுதலை செய்திட தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Perarivalan ,TTV , TTV dinakaran
× RELATED சொல்லிட்டாங்க…