×

புதுச்சேரி கவர்னரை திரும்ப பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநரை உடனே திரும்ப பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநரை உடனே திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Puducherry ,governor ,MK Stalin , Puducherry, Governor, MK Stalin
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...