×

சென்னையில் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் 6 நாள் பயிற்சியில் ஈடுபடுகிறது

சென்னை: இந்திய-பசிபிக் நாடுகளின் கடலோர பாதுகாப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் சென்னை துறைமுகம் வந்துள்ளது. 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை இங்கு கூட்டுப் பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையினர் ஈடுபடுகின்றனர்.  ஆஸ்திரேலிய கடற்படையைச் சேர்ந்த HMAS டூவாம்பா என்ற கப்பல் சென்னை துறைமுகத்துக்கு நேற்று வந்தது. ஆஸ்திரேலிய கப்பற்படைத் தளபதி மிட்சல் லிவிங்ஸ்டோன் தலைமையில் 184 அதிகாரிகள் இந்த கப்பல் மூலம் வந்துள்ளனர். இந்திய-பசிபிக் நாடுகளின் கடலோர பாதுகாப்புக்கு ஆதரவளிக்கும் வகையிலும் ஆஸ்திரேலியாவின் ஒத்துழைப்பை நல்கும் வகையிலும் இந்த கப்பல் சென்னை துறைமுகம் வந்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு படைப் பிரிவானது கப்பல், ராணுவம், விமானப் படை ஆகியவற்றுடன் இந்தியாவில் வங்கக் கடல் பகுதியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு இந்தியா ஏற்படுத்திக் கொண்ட வெளியுறவு கொள்கை ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா  முதன்மை இடத்தில் உள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய நாடு இந்தியாவுடன் இணக்கமான தொடர்பை வளர்த்துக்கொண்டு வருகிறது. மேலும், இரு நாடுகளும் இணைந்து கடலோர பாதுகாப்பில்  உள்ள சவால்களை முறியடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, வங்கக் கடல் பகுதியில் ஆஸ்ரேலிய நாட்டின் டூவாம்பா கப்பல் பயிற்சியில் ஈடுபடுகிறது. இதன் மூலம் பசிபிக் நாடுகளிடையே திறன்களை வளர்த்துக் கொள்வது, தொழில் ரீதியான திறன்களை பலப்படுத்துவது முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது. அந்த வகையில் இ ந்த ஆண்டும் மத்திய கிழக்கு பகுதியில் கடல் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாட்டில் ஆஸ்திரேலியாவின் டூவாம்பாவும் ஈடுபடுகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலிய கப்பற்படை குழுவினர் 184 பேர் மற்றும் படைத்தளபதியும் 15ம் தேதி வரை இந்த பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.


Tags : Australian ,Chennai , Chennai, Australian naval vessel, training
× RELATED ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்...