×

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி 13 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழகத்தில் வருகிற 19ம் தேதி 13 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு  நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள  வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக அரசை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என்று நினைத்தால் நடக்காது. 2021ம் ஆண்டு தான் பொதுத்தேர்தல் நடக்கும். மனப்பால் குடிக்கிறார்கள். 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் உரிய நேரத்தில் நல்ல முடிவு எடுப்பார். அனைத்து விதமான அழுத்தங்களையும் கொடுப்போம். ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது. 7 பேர் விடுதலையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

விருத்தாச்சலத்தில் கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காதல் என்ற விஷயத்தில் எந்தவிதமான சாதி, மதம் பார்க்க முடியாது. இந்த விஷயத்தில் சட்டத்தை மீறி கேடு விளைவிக்கப்பட்டிருகிறது என்றால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். ஏற்கனவே தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்துள்ளது. தேர்தல் ஜனநாயக ரீதியில் தமிழகத்தில் நடந்துள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 67 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், ஒருசில வாக்குச்சாவடிகளில் எண்ணிக்கையில் அளவுக்கு அதிகமாக வாக்கு இருக்கும். அப்போது சந்தேகம் ஏற்படும்.

இதனால், தமிழகத்தில் வருகிற 19ம் தேதி 13 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கர்நாடகா, ஆந்திராவிலும் மறுவாக்குப்பதிவு உள்ளது. இதில் எவ்விதமான பிரச்னையும் நடக்காது. நீட் தேர்வு தமிழகத்தில் தேவையில்லை என்பதே எங்கள் ெகாள்கை.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Jayakumar ,arrival ,interview ,Tamil Nadu , Tamilnadu, tailgate, rehabilitation, minister jayakumar
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...