பாஜவுடன் தமாகா இணைப்பு? ஆதாரமற்ற புரளி என ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: பாஜவுடன் தமாகா இணைக்கப் போவதாக வெளியான தகவல் ஆதாரமற்ற புரளி என்று ஜி.கே.வாசன் கூறினார்.  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ, அதிமுக கூட்டணியில் இணைந்து தமாகா போட்டியிட்டது. இந்த கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் கோவையில் நடந்த அதிமுக கூட்டணி பிரசார கூட்டத்தின் போது, பிரதமர் மோடியுடன், தமாகா தலைவர் ஜி.ேக.வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த சூழ்நிலையில் தமாகாவை, பாஜகவுடன் இணைக்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளிவந்தது. இதை ஜி.கே.வாசன் அடியோடு மறுத்துள்ளார்.

இது குறித்து ஜி.கே.வாசனிடம் கேட்ட போது அவர் கூறுகையில்,‘‘தமாகாவை பாஜவுடன் இணைக்க இருப்பதாக வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை. இப்படி வெளியான ஆதாரமற்ற செய்திகளை வைத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டிருப்பது வருத்தத்துக்குரியது’’ என்றார்.

Related Stories:

More
>