×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் ஜோகோவிச்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில்  விளையாட, நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தகுதி பெற்றார். கால் இறுதியில் ஜோகோவிச்சுடன் மோதுவதாக இருந்த குரோஷிய வீரர் மரின் சிலிச், உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ஜோகோவிச் அரை இறுதிக்கு எளிதாக முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் ரோமானியாவின் சிமோனா ஹாலெப், சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக்குடன் மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், ஹாலெப் 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த பெலிண்டா 7-6 (7-2) என டை பிரேக்கரில் வென்று சமநிலை ஏற்படுத்தினார். எனினும், 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அதிரடியாக புள்ளிகளைக் குவித்த ஹாலெப் 6-2, 6-7 (2-7), 6-0 என்ற செட் கணக்கில் 1 மணி, 57 நிமிடம் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார்.

Tags : end ,semi-final , Jokovic, Madrid Open Tennis ,semi-final
× RELATED காய்ந்த புற்களை தீயில் எாிப்பு-சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு