×

மகளிர் டி20 சேலஞ்ச் இறுதி போட்டியில் இன்று வெலாசிட்டி - சூப்பர்நோவாஸ் மோதல்

ஜெய்பூர்: மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் இறுதிப் போட்டியில், வெலாசிட்டி - சூப்பர்நோவாஸ் அணிகள் மோதுகின்றன. மகளிர் ஐபிஎல் டி20 தொடருக்கு முன்னோட்டமாக பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ள இந்த தொடரில் மித்தாலி ராஜ் தலைமையிலான  வெலாசிட்டி, ஸ்மிரிதி மந்தானா தலைமையிலான டிரெய்ல்பிளேசர்ஸ், ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணிகள் லீக் சுற்றில் மோதின. ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடன் தலா ஒருமுறை மோதிய நிலையில், 3 அணிகளுமே தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. ரன்ரேட் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடித்த சூப்பர்நோவாஸ், வெலாசிட்டி அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.ஜெய்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்கும் பைனலில் இரு அணிகளும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. வெலாசிட்டி அணியில் கேப்டன் மித்தாலி ராஜ், டேனியலி வியாட், ஷபாலி வர்மா நல்ல பார்மில் உள்ளனர்.

சூப்பர்நோவாஸ் அணியில் ஜெயாங்கனி, ஜெமிமா ரோட்ரிகியூஸ் ரன் குவிப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். லீக் சுற்றில் வெலாசிட்டி அணியை வீழ்த்தியுள்ளதும் சூப்பர்நோவாஸ் அணிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இரு அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. சூப்பர்நோவாஸ்: ஹர்மான்பிரீத் கவுர் (கேப்டன்), அனுஜா பாட்டீல்,  அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிகியூஸ்,  மான்சி ஜோஷி, பூனம் யாதவ், ராதா யாதவ், பிரியா புனியா, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), சாம்ரி அட்டபட்டு (இலங்கை), லீ தாகுகு (நியூசிலாந்து), நதாலி ஸ்கிவர் (இங்கிலாந்து), சோபி டிவைன் (நியூசிலாந்து). வெலாசிட்டி: மித்தாலி ராஜ் (கேப்டன்), வேதா கிருஷ்ணமூர்த்தி, தேவிகா வைத்யா, ஏக்தா பிஷ்ட், கோமல் ஷன்சத், ஷபாலி வர்மா, ஷிகா பாண்டே, சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), சுஷ்ரீ திவ்யதர்ஷினி, அமேலியா கேர் (நியூசிலாந்து), டேனியலி வியாட் (இங்கிலாந்து), ஹேலி மேத்யூஸ் (வெ.இண்டீஸ்),  ஜஹானாரா ஆலம் (வங்கதேசம்).

Tags : Waltzite - Supernova ,Confrontation Today , Women's T20 Challenger Final
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி