×

கொரியாவுடன் மகளிர் ஹாக்கி தொடர் இந்திய அணிக்கு ராணி கேப்டன்

புதுடெல்லி: தென் கொரியாவுடன் ஹாக்கி டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இந்திய அணியின் கேப்டனாக ராணி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மகளிர் ஹாக்கி அணி தென் கொரியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ராணி ராம்பால் தலைமையிலான அணியில் மொத்தம் 18 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். முதல் போட்டி மே 20ம் தேதி ஜின்சுன் தேசிய தடகள மைய மைதானத்தில் நடைபெற உள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற உள்ள சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் மகளிர் சீரீஸ் பைனல்ஸ் தொடருக்கு தயாராக, தென் கொரிய சுற்றுப்பயணம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என கேப்டன் ராணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோல் கீப்பர்கள்: சவிதா (துணை கேப்டன்), ரஜனி எதிமார்ப்பு. தற்காப்பு: சலிமா டெடே, சுனிதா லாக்ரா, தீப் கிரேஸ் எக்கா, கரிஷ்மா யாதவ், குர்ஜித் கவுர், சுஷிலா சானு. நடுகளம்: மோனிகா, நவ்ஜோத் கவுர், நிக்கி பிரதான், நேஹா கோயல், லிலிமா மின்ஸ்.முன்களம்: ராணி (கேப்டன்), வந்தனா கட்டாரியா, லால்ரேம்சியாமி, ஜோதி, நவ்நீத் கவுர்.

Tags : Queen ,team ,Korea ,Women's Hockey Series Indian , Women's Hockey Series ,Indian team with Korea
× RELATED தகிக்கும் மலைகளின் அரசி:...