×

பயிற்சி ஒருநாள் போட்டியில் ஆஸி. லெவன் அபார வெற்றி

நியூசிலாந்து லெவன் அணியுடன் பிரிஸ்பேனில் நடந்த பயிற்சி ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா லெவன் அணி 16 ரன் வித்தியாசத்தில் (டி/எல் விதி) வென்றது. டாசில் வென்று பேட் செய்த நியூசிலாந்து லெவன் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன் குவித்தது. வில் யங் 111 ரன் (108 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்), ஒர்க்கர் 59, நீஷம் 39 ரன் விளாசினர். ஆஸி. லெவன் பந்துவீச்சில் கம்மின்ஸ் 4, ஸம்பா, ஸ்டாய்னிஸ் தலா 2, ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆஸி. லெவன் அணிக்கு 44 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. டி/எல் விதிப்படி 44 ஓவரில் 233 ரன் எடுத்திருந்தாலே போதும் என்பதால், ஆஸி. அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. வார்னர் 2, கவாஜா 23, ஷான் மார்ஷ் 32, ஸ்டாய்னிஸ் 15, மேக்ஸ்வெல் 70 ரன்னில் (48 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தனர். ஸ்டீவ் ஸ்மித் 91 ரன் (108 பந்து, 10 பவுண்டரி), கேப்டன் அலெக்ஸ் கேரி 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Tags : Aussie , Australia XI, New Zealand XI
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...