×

சதம் விளாசினார் மெக்லியாட் ஸ்காட்லாந்து ரன் குவிப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், ஸ்காட்லாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன் குவித்தது. எடின்பர்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் மெக்லியாட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார் (100 ரன், 89 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்). கேப்டன் கோயட்சர் 79 ரன் (98 பந்து, 12 பவுண்டரி), கிராஸ் 32, பெர்ரிங்டன் 33, முன்சி 28, வாலஸ் 20 ரன் விளாசினர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் குல்பாதின் நயிப் 3, ஹமித் ஹசன், அப்தாப் ஆலம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 326 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது.

Tags : McAlliot ,run ,Scotland , McAlliot scored , hundred , Scotland run
× RELATED 1 ரன் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ்...