×

நிரூபிச்சு காட்டிட்டா தூக்கில் தொங்குறேன்... கெஜ்ரிவாலுக்கு கம்பீர் சவால்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், அரசியலுக்கு வந்தாலும் வந்தார் நாலா பக்கமும் இடி வாங்கிக் கொண்டு இருக்கிறார். அவர் 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. அதோடு, அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் கொளுத்தி போட்டுள்ளனர். கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடும் கவுதம் கம்பீரை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் அடிஷி போட்டியிடுகிறார். இருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இங்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்நிலையில், அடிஷியை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் விமர்சிக்கும் பிரசுரங்கள், இத்தொகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் செய்தித்தாள்களுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளது.
இது பெரிய பிரச்னையாக வெடித்துள்ளது. கம்பீர்தான் இந்த தரம் தாழ்ந்த செயலை செய்திருப்பதாக அடிஷி கதறி, கதறி குற்றம் சாட்டியுள்ளார். கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவாலும் இதை ஆமோதித்துள்ளார். அதற்கு கம்பீர் அளித்துள்ள பதிலடியில், ‘‘நான்தான் இதை செய்ததாக கெஜ்ரிவால் நிரூபித்தால், இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தே விலகுகிறேன். பொது இடத்தில் தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன். அப்படி நிரூபிக்கவில்லை என்றால், நீங்கள் அரசியலைவிட்டு விலக தயாரா?’’ என கெஜ்ரிவாலுக்கு ஆவேசமாக சவால் விட்டுள்ளார்.

Tags : Gehlval Gambhir , Gambeer challenge, kejirwal
× RELATED சொல்லிட்டாங்க…