×

தேர்தல் செலவுக்கு கடைசி வரை பணம் தராத கட்சித்தலைமை: டி.டி.வி.நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார் என குற்றச்சாட்டு; கூட்டணி கட்சியினரும் அதிருப்தி

அமமுக அணியில் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ. மற்றும் பல்வேறு சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அமமுகவை பொறுத்தவரை கடந்த நாடாளுமன்ற தேர்தல் போல் கட்சி தலைமை தேர்தல் செலவுக்கு பணம் தரும் என்று நிறையபேர் போட்டி போட்டு தேர்தலில் போட்டியிட முன்வந்தனர். வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு களம் இறக்கப்பட்டனர். அவர்களில் பலர் கட்சி தலைமை செலவுக்கு பணம் வழங்கும் என்று எதிர்ப்பார்த்து தேர்தல் பணிகளை தொடங்கினர். ஆனால், கடைசி வரை கட்சி தலைமையில் இருந்து எந்த பணமும் வழங்கப்படவில்லை என்று அமமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். பணம் கிடைக்காததால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் பிற கட்சிகளில் இணைந்தனர். மீதியுள்ள வேட்பாளர்கள் கடைசி வரை பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களுக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. இப்படி டிடிவி. செய்வார் என்று தெரிந்து இருந்தால் தேர்தலில் நின்று கூட இருக்க மாட்டோம் என்று வேட்பாளர்கள் கடும் கவலையில் இருந்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி தான் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிக்கு தேர்தல் செலவுக்காக பணம் வழங்குவது வழக்கம். ஆனால், கூட்டணி கட்சிகளுக்கும் அமமுக சார்பில் பணம் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு வரும் அமமுகவினர், வேட்பாளர்களிடமே செலவுக்கு பணம் கேட்டு நச்சரித்தும் வந்தனர். கட்சி தலைமை எங்களுக்கு பணம் தரவில்லை. வேட்பாளராகிய நீங்கள் தான் எங்களுக்கு பிரசாரத்துக்கு பணம் தர வேண்டும். பணம் தரவில்லை என்றால் பிரசாரத்துக்கு வரமாட்டோம் என்று மிரட்டிய காட்சியும் அரங்கேறியதாக அமமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். …

The post தேர்தல் செலவுக்கு கடைசி வரை பணம் தராத கட்சித்தலைமை: டி.டி.வி.நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார் என குற்றச்சாட்டு; கூட்டணி கட்சியினரும் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : T. TD EV ,Amadhatham ,Squadru ,S. TD ,GP GI ,Amamugu ,Parliamentary Election ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க...