×

ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி : ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் இன்று முடிவுற்ற நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கு முன்பு கடைசி நாளான இன்று ரஃபேல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ரஃபேல் வழக்கில் கடந்த டிச., வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு விசாரணை செய்து வருகிறது நடைமுறையில் உள்ள நிபந்தனைகளின் படி ரஃபேல் போர் விமான ஒப்பந்த சரியாக வழங்கப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அரசுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் ஃரபேல் ஒப்பந்தம் செய்தது தொடர்பான ஆவணங்களும் மனுவுடன் இணைக்கப்பட்டிருந்தது.


இந்த வழக்கில் மனுதாரர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் சட்டத்திற்கு புறம்பானது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களுக்கு தலா ஒரு மணி நேரம் வழங்கப்பட்டிருந்தது. அரசுத் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபாலும் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணும் வாதம் செய்தனர். வாதங்கள் நிறைவடைந்த பின்னர் விமானங்களின் விலை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உச்சநீதிமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும், ஏற்கனவே இது தொடர்பான விவரங்களை வழங்காமல் இருந்தது தவறு என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும் விலை சம்பத்தப்பட்ட விவரங்கள் அரசுக்கு எப்படி தெரியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, சிஏஜிக்கு விலை விவரங்கள் அளிக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு ஏன் தரக்கூடாது என கேள்வி எழுப்பினார். அதற்கு ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிடுவது தேச பாதுகாப்புக்கு ஆபத்து என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பிரதமர் மோடி ஒரு திருடர் என உச்சநீதிமன்றம் கூறியதாக ராகுல் காந்தி பேசியிருந்ததற்கு எதிரான அவதூறு வழக்கும் ரஃபேல் வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது. பாஜகவின் மீனாட்சி லேகி இந்த வழக்கை தாக்கல் செய்த இந்த வழக்கில் ஏற்கனவே ராகுல் காந்தி மன்னிப்புக்கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ராகுல் காந்தி பேசியது தவறு அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இரண்டு வழக்கின் வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.


Tags : Supreme Court ,Rafael , Rafael case, Supreme Court, Rahul Gandhi, PM Modi
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...