×

பிரிட்டனுக்கு பிறகு அயர்லாந்தில் பருவநிலை தொடர்பான அவசரநிலை எச்சரிக்கை அறிவிப்பு: அந்நாட்டு நாடாளுமன்றம்

அயர்லாந்து: பிரிட்டனுக்கு பிறகு அயர்லாந்தில் பருவநிலை அவசரநிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி ஐரோப்பிய நாடுகளில் பருவநிலை ஆய்வாளரான 16 வயதாகும் கிரெட்டா தன்பெர்க் என்ற சிறுமி தொடர் போராட்டங்களை நடத்தினார். அந்த போராட்டங்களுக்கு உலகளவில் இருந்து பெரும் ஆதரவு கிடைத்த நிலையில், கடந்த மே 1-ம் தேதி உலகிலேயே முதன் முறையாக பிரிட்டனில் பருவநிலை அவசரநிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.

மேலும் 2050-ம் ஆண்டுக்குள், பொருளாதாரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல், புவி வெப்பமடைதலுக்கு காரணமானவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிட்டன் அறிவித்தது. இந்நிலையில் தற்போது அயர்லாந்தில் பருவநிலை தொடர்பான அவசர நிலையை அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. மேலும் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் வாழ்வதற்கு அயர்லாந்தை சிறந்த இடமாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

Tags : Ireland ,Britain ,country ,parliament , Emergency warning,climate change, Ireland after Britain, the parliament , country
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...