×

சாலையோரம் மற்றும் கால்வாய்களில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம்

விருதுநகர் : விருதுநகரில் சாலை ஓரம் மற்றும் தெருக்களின் ஓரங்களின் சுகாதாரமற்ற நிலையில் குப்பைகளை கொட்டியவர்கள் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தனர். விருதுநகர் நகராட்சியை குப்பை மற்றும் தெரு ஓர குப்பைத்தொட்டி இல்லாத நகராட்சியாக மாற்ற நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி ஆணையர் பார்த்தசாரதி அறிவுத்தலின் படி சுகாதரத்துறை பொறுப்பாளர் குருசாமி தலைமையிலான குழுவினர் விருதுநகர் மாத்தநாயக்கன்பட்டி ரோட்டில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது  அப்பகுதியில் தெருவோரங்களில் குப்பை கொட்டும் வீடுகளை சேர்ந்தவர்களை  கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் கால்நடை கழிவுகளை கழிவு நீர் கால்வாயில் கொட்டி கழிவு நீர் செல்ல முடியாத நிலையை உருவாக்கி  சுகாதார சீர்கோட்டை ஏற்படுத்திய இருளாயி என்பவருக்கு நகராட்சி அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

விருதுநகர் அல்லம்பட்டியில் வாறுகாலில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
இதேபோல் அந்தப் பகுதியில் நடந்த தொடர் ஆய்வில் சுகாதாரமின்றி குப்பையை கொட்டிய 4 வீடுகள் மற்றும் 8 நிறுவனங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் குப்பை கொட்டுவோர் மீது இந்த நடவடிக்கை தொடரும் என தெரிவித்தனர்.

Tags : virdhunagar,Fines,garbage ,roadside ,canals
× RELATED கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே...